நாகர்கோவில் – டிச- 11,
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்திட வலியுறுத்தியும், ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்திடவும், ஊழல்களுக்கு துணை சென்ற ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தி சிபிஐ எம் கட்சியின் இராஜாக்க மங்கலம் ஒன்றியக்குழு சார்பில் நேற்று தர்மபுரம் வடக்கு வில்லேஜ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் துவக்கி வைத்து பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மிக்கேல் நாயகி, குமரேசன்,கோபாலன், சிவகோபன், பபிதா உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.