தருமபுரியில் நில அளவை அலுவலர்கள், ஒன்றிப்பினர் காத்திருப்பு போராட்டம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
நில அளவைபணியாளர்களின் 9 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
களப் பணியாளர்கள்செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும்.உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டலத் துணை இயக்குநர் இணை இயக்குநர் (நிர்வாகம்), இளக்குநர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச் சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிடவேண்டும்.தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்கவேண்டும்.
சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவைக் களப் பணியாளர்களை பதவி உயர்வு வழங்கவேண்டும்.தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் அரசாணை எண் 10-ஐ கடைபிடிக்கவும் பொது மாறுதல் நடைமுறையை நில அளவைப் பதிவேடுகள் துறையில் மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
நில அளவைப் பதிவேடுகள் துறையில் மிக முக்கியமான அடிப்படை பணியாக உள்ள புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமையின் மூலம் அத்துக் கூலிக்கு நியமனம் செய்வதைகைவிட்டு கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி. வெங்கட்டேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சி. பிரபு, மாவட்ட பொருளாளர் மா. முருகன்,மாவட்ட இணை செயலாளர் க. தவமுணி,அரூர் கோட்ட தலைவர் ரா. சக்தி வேல், கோட்ட செயலாளர் கு. சின்னராசு, தருமபுரி கோட்ட துணைத்தலைவர் தா. துரை, மகளிர் அணி தலைவர் சி. சண்முக பிரியா , ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சி. காவேரி, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே. புகழேந்தி,தமிழ்நாடு ஓய்வுபெற்ற நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட தலைவர் ஜி. குமரேசன், மாவட்ட பொருளாளர் எம். சங்கர்,
ஆகியோர் வாழ்த்தி பேசினர்.