செப்டம்பர்: 27
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி திருப்பூர் ஒன்றியம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில்
எஸ் எஸ் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 21.29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி
மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் சாமிநாதன் அவர்களின் பரிந்துரையின் பேரில் லட்சுமி கார்டன் பகுதியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைத்தல் பணி மாவட்ட கவுன்சிலர் பரிந்துரையின் பெயரில் வீதிக்காடு பகுதியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல்
மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் காளிபாளையம் ஊராட்சி புதுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூபாய் 9.04 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் பணிஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்து
எஸ் எஸ் நகர் பகுதியில் MGNREGS 2023-24 நிதி மூலம் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.உடன் மாவட்ட கவுன்சிலரும் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான வேல்குமார் சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஐஸ்வர்ய மகாராஜ், ரத்தினம்மாள் சிவசாமி, ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், காளிபாளையம் முன்னாள் தலைவர் பொன்னுலிங்கம், காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடிவேல், துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் காளிமுத்து, ராசப்பன், யுவராஜ் ராம்குமார், சாமிக்கண்ணு, வீரப்பன், முருகேஷ்குமார், அருண், செந்தில்குமார், சையது சரவணன் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்