அரியலூர், ஜூலை:04
அரியலூர் மாவட்டம் ,செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் நடைபெற்ற வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மின் மூலமாக
சிறுகடம்பூர்
விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் செந்துறை வேளாண்மை துறையை சார்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா வேளாண்மை அலுவலர் ஜெர்சி வட்டார தொழில்நுட்ப அலுவலர் செந்தில் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆனந்தி, ஒளிச்செல்வி, ரம்யா, முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை விரிவாக்க மேம்பாட்டை பற்றி சோழமாதேவியிலிருந்து வருகை புரிந்த கீரீடு வேளாண்மை அறிவியல் மையத்தில் பணிபுரிகின்ற அசோக்குமார் விவசாயிகள் நிலத்தில் எப்படி ரசாயன உரத்தை குறைத்து தக்க பூண்டை பயன்படுத்தி விவசாயம் மேம்பட செய்ய வேண்டும், எவ்வாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும், மண் நிலத்தை எப்படி பண்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இந்த ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உறுதுணை புரிந்த வேளாண்மை தோட்டக்கலை உதவி அலுவலர் பெரியசாமி உதவி புரிந்தார்கள்.
நிகழ்ச்சி இனிதே சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்