மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.98 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாகம்பட்டி, மத்தூர், களர்பதி, கே.எட்டிப்பட்டி, குன்னத்தூர், வாலிப்பட்டி, கெரிகேப்பள்ளி, வீராச்சிக்குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.98 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
, மத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாகம்பட்டி ஊராட்சி, மாடரஹள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II 2023-2024 கீழ், ரூ.6 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெண்கள் கழிப்பறை கட்டிடத்தையும், மசூதி தெருவில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் (2023-2024) கீழ், ரூ.15 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மத்தூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் இயங்கி வரும் ஆதார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பிஸியோதெரப்பி, பேச்சுத்திறன், சிறப்பு கல்வி, மனநலம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு செய்து, இம்மையத்திற்கு வருகை புரிந்த பிறகு மாற்றுத்திறன் குழந்தைகளின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதா என்று குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டறிந்தார். மேலும், மத்தூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் 2022-2023 கீழ், ரூ.12 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடை ஆய்வு செய்தும், மேலும், மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, ரூ.62 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் பாலா பெயிண்டிங் பூசும் பணிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, களர்பதி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2021-22 கீழ், ரூ.6 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பட்டு வளர்ப்பு கொட்டகை அமைக்கப்பட்டு பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு கூடுகள் விற்பனை குறித்து பயனாளியிடம் கேட்டறிந்தார். மேலும், கே.எட்டிப்பள்ளி ஊராட்சி, மங்கவரம் கிராமத்தில் ஜல் ஜீவன் சேமிப்பு நிதி 2023-24 கீழ், ரூ.7 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்பட்டுள்ள நீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கே.எட்டிப்பட்டி ஊராட்சி, கூனம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2023-24கீழ், ரூ.2 இலட்சம் மதிப்பில் விவசாயி திரு.பழனி த/பெ.வீராகவுண்டர் அவர்கள் விவசாய நிலத்தில் மண் வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ், ரூ.35 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், குன்னத்தூர் ஊராட்சியில், பாரத பிரதமர் ஜன்மன் திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.4 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பயனாளிகள் .நிரோஷா க/பெ.சுரேஷ், .சசிகலா க/பெ.ராஜா ஆகியோர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகளையும்,
தொடர்ந்து, குன்னத்தூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் 145 மீட்டர் நீளத்திற்கு ரூ.7 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.உமா சங்கர், .சிவபிரகாசம், உதவி பொறியாளர்கள் .சாஷ்தா, .ஜமுனா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.