தஞ்சாவூர். மார்ச். 8.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணி களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டார் .வீராச்சாமி வீடு ரூபாய் 1,05,000 மதிப்பிலும் ,கார்த்திகா வீடுரூபாய்1,46,000 மதிப்பி லும், பால்ராஜ் ஆறுமுகம் வீடுரூபாய் 1,00,000மதிப்பிலும், மாரியாயி மணிமாறன் ஆகியோர் வீடுகள் இத்திட்டத்தின் கீழ் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ,வீடுகள் சீரமைப்பு பணிகள் தரமான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, என்பதை மாவட்ட ஆட்சியத் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் செங்கிப்பட்டி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீடு கட்டும் பணி களையும், ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆதிதிராவிட நலதொடக்கப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செங்கிப்பட்டி புதுகுளத்தினை பார்வையிட்டு, தூர் வாரும் பணிகளை மேற்கொள்வது குறித்தும், சமுதாய கிணறு புதுப்பிக்க வேண்டிய பணிகளை யும் ஆய்வு செய்தார்.
மேலும் செங்கிப்பட்டி அத்திவெட்டி சாலையில் சிறிய பாலம் ரூபாய் 2.8 கோடி மதிப்பில் பணிகள் முடிவுற்றதையும் பார்வையிட்டு ,ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.