அந்த வகையில்
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் ரூபாய் 40. லட்சத்து 54. ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், புலிவலம் ஊராட்சியில் லெட்சுமி நகரில் ரூ.12 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டு வருவதையும் புலிவலம் ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், குன்னியூர் ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் பழுதுநீக்கப்பட்டுள்ளதையும்
அதனைத் தொடர்ந்து
வேப்பதாங்குடி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுவருவதையும் வேப்பதாங்குடி ஊராட்சியில் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் 3 குடியிருப்பு வீடுகளையும் வேப்பதாங்குடி ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் வீடுகளில் பழுது நீக்கம் செய்யப்பட்டுவருவதையும், வேப்பதாங்குடி ஊராட்சியில் ரூ.13 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதுநீக்கம் செய்யப்;பட்டுவருவதையும் திருக்காரவாசல் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தேரடி குளத்தில் படித்துறை கட்டப்பட்டுள்ளதையும், திருக்காரவாசல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 200 மரக்கன்றுகள் சாலை இருபுறமும் நடவு செய்யப்பட்டுவருவதையும் திருக்காரவாசல் ஊராட்சியில் கோமல் பகுதியில் ரூ.138 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், திருக்காரவாசல் ஊராட்சியில் கோமல் பகுதியில் நபார்டு (2023-2024) திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டியூரில் வெள்ளையாற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுவருவதையும் பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், உதவி பொறியாளர் சூர்யமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் சிதம்பரம், மேற்பார்வையாளர்கள் ஜான்போஸ்கோ,தியாகராஜன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.