கோவை மாவட்டம் தேவாங்க ஆரம்ப பள்ளியை
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70-க்குட்பட்ட தேவாங்க ஆரம்பப்பள்ளியில் கல்வி நிதியின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.