கம்பம்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவசர உறுதிக்கு தகவல் கொடுத்து கம்பம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயர்ந்த உள்ளார். இதன்படி அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபரை கம்பம் சிவமடம் மற்றும் குடும்பத்தார்கள் சார்பில் ஆங்கூர்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். உடன் காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், சிவனடியார்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.