இளையான்குடி:
நவ:30
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வே.தமிழ்மாறன் அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் சூராணம் புனித ஜேம்ஸ் தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பேக் நோட்புக் பேனா பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் பள்ளி குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எனவும் மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தை தந்திட்ட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி கூறிடுவோம் எனக்கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் பொற்கோ மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் வினோத் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவமணி உள்ளிட்ட ஒன்றிய கிளைக் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.