அரியலூர், மே:27
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் உடன் இருந்தார்கள்.
முகாம் அலுவலகத்தில் பின்பற்றப்படும் அனைத்து பதிவேடுகள், மற்றும் கோப்புகளையும் பார்வையிட்டார்.புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவை உள்ள மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
அரியலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வழக்குகளை துரிதமாக முடித்து, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தரவும் அறிவுறுத்தினார்கள்.
இதனை அடுத்து அரியலூர் நகர காவல் நிலையத்திற்கு காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருகை தந்தார். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் அவர்கள் வரவேற்றார்கள். உடன் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இருந்தார்.
காவல் நிலைய வளாகத்தின் தூய்மை, மற்றும் பராமரிப்பை பார்வையிட்டார் , மேலும் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.