தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்.
தருமபுரியில்
தமிழ்நாடு ஊரக வளரசித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட 9-ஆவது மாநாடு வின்சென்ட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் கோ. கோபிநாத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளர் ச. இளங்குமரன் வரவேற்றார். மாநிலதுணைத்தலைவர் இரா. ஆறுமுகம் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் வே. தர்மன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் கே. வினோத் குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் அப்பாவு, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பா. சங்கர் , மாவட்ட துணைத்தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, கே. வேலுமணி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில பொதுச்செயலாளர் ப. பாரி நிறைவுறையாற்றினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக மு. முகமது இலியாஸ், மாவட்ட செயலாளராக வெ. தர்மன், பொருளாளராக கே. வினோத் குமார், மாநில செயற்குழு உறுப்பினராக பி. பிரின்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருங்கிணைப்பாளராக ச. இளங்குமரன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைய இண்டூர், தீர்த்த மலை, மாரண்ட அள்ளி, பெரியாம்பட்டி ஆகிய 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களாக உருவாக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கிராமபுற போரூராட்சிகளை அடையாளம் கண்டு ஊராட்சிகளாக மாற்றம் செய்யவேண்டும். கிராமபுற ஊராட்சிகளை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலாளத்தை கணக்கில் கொண்டு தனி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடு பழுது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முழுமையான இலக்கை அடைய வட்டார அளவில் இணை இயக்குநர் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் , உதவியாளர், கணிணி இயக்குபவர், போன்ற பணியிடங்களை உருவாக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இடம் பெற்றுள்ளவாறு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் வட்டார திட்ட அலுவலரை தனியாக நியமித்து ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். துறையில் உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளை ஊர்நல அலுவலர் முதல்நிலை மற்றும் ஊர்நல அலுவலர் லெவல் இரண்டாம் நிலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கவேண்டும். மாநில அளவில் வளர்ச்சித் துறையில் உதவிஇயக்குநர் பதிவிக்கென தேர்ந்தோர் பட்டியலை ஒவ்வொரு வருடமும் தயாராக வைத்து ஒவ்வொரு பணியிடம் காலி ஏற்பட்ட அடுத்த நாளே பதவி உயர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியான இடைவிடாத விடுமுறைதினத்தில் இணைய வழி ஆய்வு கூட்டம் விடுமுறைதினத்தில் ஆய்வுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மக்களுடன் முதல்வர் மனுக்கள் முகாமிற்கான அனைத்து பணிகளையும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்த முகாமினை ஒவ்வொரு கிராமஊராட்சியிலும் நடத்தும் வகையில் ஒவ்வொருஊராட்சிக்கும் செலவினங்களுக்காக அரசு ஒதுக்கிய ரூ 25,000 நிதியை அரசு அறிவித்த வாறு ஒதுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் திட்டம் இரண்டாம் கட்ட பணிகளை துவக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகி பிரின்ஸ் நன்றி கூறினார்.