சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு திறப்பு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார். உடன் சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் பி.அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் எஸ்.பரிமளா, சிங்கம்புணரி பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், 14-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தாயுமானவன், சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.