ஈரோடு ஜூலை 31
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத் துறை சார்பாக ராமானுஜர் கணித மன்றத்தின் செயல்பாடுகளின் தொடக்க விழா தாளாளர் தங்கவேல் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. முதல்வர் முனைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக ஆசீர், இணைப் பேராசிரியர், ராமானுஜன் கணித அறிவியல் பள்ளி இணை பேராசிரியர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி அவர்கள் கலந்து கொண்டு கணித துறை மாணவ,மாணவிகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், அதை அடைய எவ்வாறு அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார். இந்நிகழ்வில் கணித துறைத்தலைவர் எஸ்.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணித துறை பேராசிரியர்கள் மற்றும் மற்றும் மாணவ
மாணவியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.