தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது,
இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பாக்கியராஜ் தலைமையில் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை சேர்க்கக் கோரி ஒற்றைப் கோரிக்கை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாவட்ட பொருளாளர் உட்பட்ட 270 ஊராட்சி செயலர்கள் மற்றும் திருப்புவனம் ஒன்றியத்தின் சார்பாக அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டனர்.