கிருஷ்ணகிரி: ஜுலை:11 தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சுகாதார உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், OHT ஆபரேட்டர்கள், VPRC கணக்காளர்கள், மற்றும் WHV தன்னார்வலர்கள் உள்ளடங்கிய ஊராட்சி பணியாளர்கள், சங்கங்களின் ஓட்சா கூட்டமைப்பு மாநில சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் கே.லட்சுமணன், தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.திருப்பதி, மாவட்டச் செயலாளர் குருமணி, மாவட்ட பொருளாளர் சரசு, ஆகியோர் வரவேற்பு உரைஆற்றினர். கிருஷ்ணகிரி ஒன்றிய சுகாதார உறுப்பினர் பானுப்பிரியா, முன்னிலை வைகித்தார். ஓட்சா கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.அமல்ராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு DA மற்றும் GO14 படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனவும், தாமதமாக ஊதியம் வழங்கும் ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு புதிய சீருடை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கினால் பணி செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும், ஊராட்சியில் தூய்மை பணியாளர்களின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனவும், OHT ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கையில் பதாததைகளை ஏந்தியவாறு கோரிக்கை முழக்கமிட்டனர். மாநில பொருளாளர் திருவண்ணாமலை கிரிஷா, மாநில செயலாளர் கடலூர் செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை சென்னம்மாள், விழுப்புரம் லதா, திருவண்ணாமலை சபிதா, காஞ்சிபுரம் சத்யா, ராணிப்பேட்டை ஷோபா, மாநில ஒருங்கிணைப்பாளர் தளி சர்தார், திருவண்ணாமலை முருகன், அஞ்சட்டி முனியப்பன், திருப்பத்தூர் சரவணன், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் சத்யானந்தம் நன்றியுரை ஆற்றினார்.
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics