நாகர்கோவில், ஜூலை – 07,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஜெபமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன் பாக்கிய தீபா விளக்க உரை ஆற்றினார். சமூக நலத்துறை மாநிலத் துணைத் தலைவர் நாஞ்சில் நிதி சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமூக தணிக்கை எதிர்த்தும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு பணியாளர்கள் அரசு ஊழியர் என அறிவிப்பது, கிராம அலுவலர்களுக்கு நிகரான ஓய்வூதியம் ரூ 6750 சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கிடவும் கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பிரபா நன்றியுரை ஆற்றினார்.