ராமநாதபுரம், டிச.20-
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர். காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ECR சாய்ராம் ஹோட்டல் அருகில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைக்கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.