நாகர்கோவில் – செப் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேங்காப்பட்டினம் துறைமுக இனயம் மண்டலம் மீனவ மக்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வலைகளை கையில் ஏந்தி கொண்டு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே காச்சா மூச்சா வலை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அழிக்கும் காச்சா மூச்சா வலையை நிரந்தரமாக மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தேங்காப்பட்டினம் துறைமுக இணயம் மண்டலம் மீனவ மக்கள் சார்பில் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல தலைவர் சதீஷ் ராஜன் தலைமை தாங்கினார். இனயம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வம் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மண்டல அருட்பாளர்கள் ஜாக்சஸ் இளங்கோ, சகாய வில்சன், சகாய செல்வம் மற்றும் மீனவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் கையில் காச்சா மூச்சா வலையை ஏந்தியபடி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மீனவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.