தேனி செப் 26:
தேனி மாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஹானஸ்ட் ராஜ் தலைமையில் நடைபெற்றது இது பற்றி அவரிடம் கேட்டபோது “நாங்கள் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறோம் நாங்கள் தேனி மாவட்டத்திலும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கேரள மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை ஏற்றி விற்பனை செய்து கொண்டு வருகிறோம் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஸர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலை ஏற்றம் செய்தனர் இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலையற்றம் செய்யப்பட்டுள்ளது அதில் யூனிட் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு 3000 இருந்த எம் சாண்ட் நான்காயிரம் ரூபாயாகவும் நான்காயிரம் இருந்த பி சாண்ட் 5000 ரூபாயாகவும் பல மடங்கு வித்தியாசத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்களும் கட்டுமான தொழிலாளர்களும் பொதுமக்களும் மற்றும் எங்களைச் சார்ந்த நிறுவனங்களும் 19/9/2024 முதல் கிரஷர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் மேலும் எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் கிரஷர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பொழுது அவர்கள் தேனி மாவட்ட கனிமவளத்துறை எங்களது கல்குவாரிக்கு 30 லட்சம் முதல் 2 கோடி வரை அபராதம் விதித்துள்ளார்கள் மேலும் EB கட்டண உயர்வு அதிகாரிகளுக்கு கொடுக்கும் மாமுல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலை ஏற்றம் செய்ததாக சொல்லுகிறார்கள் எனவே நாங்களும் பொதுமக்களும் மற்றும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் எனவே எங்கள் அனைவருடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும்பொழுது சரியான முன்னறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் இனிவரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் அருண்குமார் மேலும் விஜி, சிவா , டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டுமான தொழிலாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.