இராமநாதபுரம், ஜுலை 28-
மத்திய அரசு நிதியை பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் வழங்கி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற மத்திய பிஜேபி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலுக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ. பா. ரங்கநாதன் தலைமையிலும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன், ஜோதி பாலன், சரவண காந்தி, நகர் தலைவர் கோபி ஆகியோர் முன்னிலையிலும் ராமநாதபுரம் அரண்மனை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆனந்தகுமார், ஆர்ட் கணேசன், பாலகிருஷ்ணன், துல்கிப் கான், கிருஷ்ணராஜ் வட்டார, நகர தலைவர்கள் கார்குடி சேகர், கந்தசாமி, சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ராஜீவ் காந்தி மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு கோபால், நெசவாளர் அணி கோதண்டராமன், பட்டியல் துறை லாந்தை ராஜா, சிறுபான்மை துறை வாணி இப்ராஹிம் மாவட்ட நிர்வாகிகள் திருமுருகன், கமர்தின், அன்சாரி சேட், ஹனீப் கான் இளைஞர் அணி நிர்வாகிகள் சதாம் உசேன், பிரேம், அல் அமீன் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.