பழனியில் தட்டான் குளம் பகுதியில் விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி.
மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இதன் ஒரு அங்கமாக கொய்யாவில் வேர் முடிச்சு நூற் புழு மேலாண்மை பற்றி மாணவர் சுதிர்த் விஷால் செயல் விளக்க கூட்டம் நடத்தினார்.
இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.