திண்டுக்கல் மே 24
கலிக்கம்பட்டி கிராமத்தில் இனம் கவர்ச்சி பொறி வெள்ளோட்டம் பயன்பாடுகள் பற்றி செயல் விளக்க கூட்டம். மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இதன் ஒரு அங்கமாக இனம் கவர்ச்சி பொறி வெள்ளோட்டம் பயன்பாடுகள் பற்றி பாலாஜி செயல் விளக்க கூட்டம் நடத்தினார்.
மேலும் ஒளிப்பொறி பயன்படுத்தி முருங்கையில் ஏற்படும் பூச்சிகளின் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும் பயிர் பாதுகாப்பில் உயிரியல் முறைகட்டுப்பாடு பற்றியும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.