நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் நீலகிரி மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது
கொரோனா காலகட்டத்தில் பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தமையை கண்டித்தும் காலம் முறை ஊதியம் ரூ.15,000. உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் காலியாக உள்ள 1500 இடங்களை நிரப்பவும் பேறு கால விடுப்பு சலுகைகளை வழங்கி பணி நிரந்தரம் செய்யக்கோரியம், உச்சநீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றக்கோரி எம்ஆர்பி செவிலியர்கள், தற்காலிக பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.