நாகர்கோவில், ஜூலை – 16,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள், 51 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி ஆகியவை உள்ளன . இதில் 10 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரவு உயர்த்தவும் 25 கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்கவும் மேலும் பல ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை நகராட்சி, மாநகராட்சி உடன் இணைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,
கிராம ஊராட்சிகளை நகர்ப்புற ஊராட்சிகளாக மாற்றுவதால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு பயனாளிகள் வெளியேற்றப்படுவார் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்து கிராமப்புற கட்டுமான திட்டங்களை இழக்க நேரிடும் வீட்டு வழி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளும் பல மடங்கு உயர்த்தப்படும் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்படும் அனைத்திற்கும் மேலாக கிராம சபை என்ற மக்கள் அதிகாரம் பறிக்கப்படும் இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
எனவே குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலன் கருதி கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் செல்ல சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் துவக்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அகமது உசேன், என் எஸ் கண்ணன், ஆர். எஸ் சேகர் , ஸ்டாலின் தாஸ், உஷா, ரெஜீஸ்குமார், விஜய மோகன், அந்தோணி , அனந்த சேகர், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், மாநகரச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ், உட்பட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் திரளாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.