நாகர்கோவில் – ஜூலை – 02 ,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ எம் எல் புரட்சிகர இளைஞர் கழக மாநில துணைத்தலைவர் அனிதா பிரின்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
நீட் தேர்வை ரத்து செய்ய கேட்டும், நீட் தேர்வு முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யட்டும், யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், தேர்வுகளில் கூட ஒரு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடுகள் செய்தவர்களின் ஐஏஎஸ் ஐபிஎஸ் சான்றுகளை பறிமுதல் செய்யட்டும், மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை மத்திய மைனாரிட்டி அரசு ரத்து செய்ய வேண்டும், கள்ளச்சாராய மரணத்திற்க்கு மாநில அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து விட வேண்டும், பட்டாசு ஆலைகளில் நடைபெறும் உயிர் பலிகளை தடுத்திட கேட்டும், வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசு மத்திய அரசும் வீடு கட்டுவதற்கு முன்பு ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை வழங்கிட கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ எம் எல் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, சுசீலா, கார்மெல் , மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர் ஜஸ்டின் சுந்தர், அர்ஜுனன், ஆர் பாலையா, தங்க லட்சுமி, சூசை மரியான், சாந்தி, சகாயமேரி உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எஸ்.எம் அந்தோணி முத்து, சிபிஐ எம் எல் மாவட்டச் செயலாளர்,விளக்கி பேசினார்.