திருப்பத்தூர்:ஜன:28, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நமது தேசம் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் லட்சுமிபதி தலைமையில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தியும், அதேபோல உள் இடஒதுக்கீடு 6% உயர்த்தி வழங்கிடவும் மேலும் 3 சதவீதம் உள் ஒதுக்கிட்டை பாதுகாத்திட வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதுமட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன அதில் முக்கிய கோரிக்கைகளாக கோவில் மானிய நிலங்களை அருந்ததியர் மக்களுக்கு விவசாயம் செய்ய குத்தகை கொடுக்க வேண்டும்.
சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
அருந்தியதியர் இட ஒதுக்கீட்டின்படி சட்டமன்ற, பாராளுமன்ற, ஊராட்சி மன்ற, தொகுதிகள் உருவாக்கிட வேண்டும். கிராமங்கள் தோறும் பொது சுடுகாட்டினை அமைக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் அருந்ததி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவர் சமத்துவபுரம் ஜெயா, திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் புவனேஸ்வரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, கந்திலி ஒன்றிய செயலாளர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் முருகன், நாட்றம்பள்ளி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சகிலா, கந்திலி ஒன்றிய மகளிர் அணி தலைவர் துர்கா மற்றும் நமது தேசம் கட்சியினை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பிரமுகர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.