தஞ்சாவூர் பிப்.25.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே திராவிடர் கழகத்தினர் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார் .தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, திமுக மத்திய மாவட்ட செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் ,மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜி ராஜேந்திரன். மதிமுக மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் இளைஞரணி மாநில துணை செயலர் வெற்றி குமார் மாணவரணி செயலர் செந்தூர பாண்டியன் ,மாவட்ட காப்பாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்