சங்கரன்கோவில். டிச.20.
சங்கரன் கோவிலில்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம் , மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணிசாமி ,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி, மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மக்கள் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும், தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது . தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, வேல்சாமிபாண்டியன் ,பராசக்தி, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை பூசைபாண்டியன், பெரியதுரை, கிறிஸ்டோபர் சேர்மதுரை, ராமச்சந்திரன், பால்ராஜ், வெள்ளத்துரை, புளியங்குடி நகரச் செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, சேதுசுப்பிரமணியன் மாரிமுத்து நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, சார்பு அணி அமைப்பாளர்கள் வக்கீல் அணி பிச்சையா, மருத்துவர் அணி மணிகண்டன்,மகளிர் அணி சிவசங்கரி, மாணவரணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ் , அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் முருகேசன், நகரத் துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன் ,ராயல்கார்த்தி, ராஜ், ராஜராஜன், மணிகண்டன், அன்சாரி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், தொமுச சங்கரன்கோவில் கிளை செயலாளர் சங்கர்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் , மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ரஜினிகாந்த், சிவாஜி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார் ,ராமுராமர், அலமேலு, செல்வராஜ், வர்த்தகர் அணி மாரிகுட்டி, மற்றும் ரஹ்மான், ஜிந்தா மைதீன், ஜெயக்குமார், ஜான்சன், பாலாஜி, விக்னேஷ் , யாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.