நாகர்கோவில் நவ 22
பகரின் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று கடலில் காணாமல் போன கடியபட்டணம் மீனவர்கள் சகாய செல்சோ,ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோரை கண்டுபிடித்து தரக்கோரியும்,அதுவரை மாயமான மீனவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் தலைவர் பீட்டர்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மங்களமேரி, மெஷோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலோர மக்கள் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் பங்கேற்ற நெல்சன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து பேசினார். கடலோர மக்கள் சங்க தலைவர் ஜாண் போஸ்கோ, அருட்பணியாளர்கள் ஆன்ட்ரூஸ், பபியான் ஆகியோர் வாழ்த்தி பேசினார். போராட்டத்தில் அருமனை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் லிஜின், சமூக ஆர்வலர் குளச்சல் முகமது சபீர், டொமினிக், ஜாண்றோஸ் மற்றும் மாயமான மீனவர்களின் மனைவியர், குடும்பத்தினர், மீனவ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.