தஞ்சாவூர். டிச.. 31.
திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ரயிலை தொடர்ந்து இயக்கக்கோரி ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தஞ்சாவூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கப்பட்டு தஞ்சாவூர் வழியாக திருச்சி தாம்பரம் விரைவு விரைவில் இயக்கப்பட்டு வந்தது
இந்த சேவை டிசம்பர் 25ஆம் தேதி உடன் நிறுத்தப்பட்டது இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை சங்க செயலர் ஜீவகுமார் தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, வழக்குரைஞர் உமர் முக்தர், முகமது பைசல் ,ராம.சந்திரசேகரன், நேரு, நாக .ரமேஷ் ,ஹாஜா மைதீன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.