ராமநாதபுரம், டிச.20-
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர். காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம் நகர் வடக்கு மற்றும் தெற்கு நகர் கழக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகில் வடக்கு நகர் செயலாளர் மற்றும் நகராட்சி சேர்மன் கார்மேகம் தெற்கு நகர் செயலாளர் மற்றும் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நகர் துணை செயலாளர்கள், பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.