திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்டிபிஐ – யினர்
வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வக்ஃபு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் மணலூர்பேட்டை சாலையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள. வக்ஃபு திட்ட சட்ட மசோதா என்பது அரசமைப்பிற்கு விரோதமான முறையில் அமைந்திருப்பதாகவும், இதன் மூலம் வக்ஃபு சொத்துக்களை திருட முயற்சிக்கும் செயல் என்றும், இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பாக முன்வைக்கப்பட்ட 584 பரிந்துரைகளில் ஒன்றை கூட பரிசீலிக்காமல் புறக்கணித்ததோடு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாடுகள் எந்த அளவில் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உறுதியாக நின்று இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.