தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கை என்ற சட்டத்தை அமல்படுத்தி தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை கட்டாய பாடமாக்கி இந்தியை கட்டாயமாக திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையிலும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சட்டசபை பொறுப்பாளர் கலை கதிரவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் ,பொருளாளர் ஷெரீப் , ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் திவான் ஒலி, அழகு சுந்தரம், சீனித்துரை, பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி பண்டாரம் பொதுக்குழு உறுப்பினர்கள்
சாமித்துரை ,டாக்டர் மாரிமுத்து ,சுரேஷ், பாத்திமா, முத்துக்குமார் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்