கோவை ஆகஸ்ட்:23
கோவை மாவட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு
கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர்,ப. இளங்கோவன் தலைமையில் பணம் மோசடி செய்த மேஸ்திரி குப்புராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய திட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்யும் கணபதி பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி சுப்புராஜ் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளரின் கையப்பத்தை மோசடியாக போட்டது, குடிசை மாற்று வாரியத்தில் குடியிருப்புகளை வேறு வேறு நபர்களுக்கு வீடுகளை மோசடியாக வாங்கிக் கொடுத்து மாற்றி தர லஞ்சம் கேட்டு வாங்கி உள்ளார்.
பராமரிப்பு என்ற பெயரில் மோசடியாக அதிகமான தொகையை பில் போட்டு ஏமாற்றி பெரும் பணம் பெற்றதையும், குடிசை மாற்று வாரியத்தில் இரவு காவலராக பகலில் தூய்மை பணி மற்றும் பராமரிப்பு பணியில் செய்த காளிமுத்து என்பவருக்கு பராமரிப்பு தூய்மை பணி செய்தமைக்கு 10 மாத ஊதியம் வழங்காமல் உள்ளதையும் கண்டித்து கோவை மாவட்ட கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் இது சம்பந்தமாக புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த புகாரில் பத்து நாட்களில் தருவதாக எழுதிக் கொடுத்த புகார் ஒரு வருடம் ஆகியும் ஊதியம் தராமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களையும் ஏமாற்றும் மேஸ்திரி குப்புராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய அண்ணல் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பட்டியல் இனத்தால் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி எம் வி ரங்கநாதன், மக்கள் ஆயுதம் ஆசிரியர் பி சி கண்ணன் கோவை பாலு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டனர்.