நாகர்கோவில் – நவ- 15,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்து வரும் அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்
ரப்பர் விவசாயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு விவசாயமாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த விவசாயம் காரணமாக பலன் அடைகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 1956 ஆம் ஆண்டு 4785 ஹெக்டரில் அரசு ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. பின்னர் 1984 ஆம் ஆண்டு இது அரசு ரப்பர் கழகமாக மாறியது.
அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள ரப்பர் காடுகள் படிப்படியாக குறைந்து வருவதை தடுத்து ரப்பர் கழகத்தினை மீட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.