தொண்டி . ஏப் 14-
தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது.அரசு மற்றும் அலுவலக பணிகளுக்கு திருவாடானை செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தொண்டியை தலைமையாக கொண்டு தனித் தாலுகா உறுவாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை மையமாக வைத்து 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.காரங்காடு முதல் எஸ்பி பட்டினம் வரையிலும் உள்ள கடற்கரை பகுதி மக்கள் அரசுப் பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு திருவாடானைக்கு செல்கின்றனர். இதனால் அதிக நேரம் விரையமாகிறது. தாலுகா அலுவலகம் நகரின் மையப்பகுதியில் இல்லாமல் நீண்ட தூரத்தில் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தொண்டியை தலைமையிடமாக காரங் காடு, முள்ளிமுனை, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் வரையிலும் உள்ள பகுதிகளை இணைத்து தனித்தாலுகாவாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை உள்ளடக்கியே திருவாடானை தாலுகா இருந்தது, பணி நிமித்தம், பொதுமக்கள் நலன் கருதி கடந்த வருடம் தனித்தாலுகாவாக பிரிக்கப்பட்டது. அதே போல் தொண்டியையும் தனித் தாலுகாவாக பிரிக்க வேண்டும் என்றார்.