ஈரோடு ஜூலை 29 ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் ஈரோட்டில் நடந்தது கெளரவ தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார் இணை செயலாளர் குமார் வரவேற்றார் பொருளாளர் சின்னசாமி நிதிநிலை அறிக்கை வாசித்தார் இணை செயலாளர் பி குமார் ஆண்டறிக்கை வசித்தார்
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகமும் குடும்பமும் என்ற தலைப்பில் வனிதா மணி அருள்வேல் மாநகராட்சி இன்ஜினியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் செயலாளர் பாலு என்ற தனபாலன் தீர்மானங்கள் பற்றி விளக்கி பேசினார் முடிவில் உதவி தலைவர் சங்கர் நன்றி கூறினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஐந்துக் கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே இந்த ரோட்டை ஒரு வழி பாதியாக மாற்றி இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
கட்டிட பொருட்களின் ஜிஎஸ்டி வரி பலவிதமாக உள்ளது இதை மாற்றி ஒரே மாதிரியாக 5 சதவீதம் விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் ஏராளமான பேர் எளிதாக வீடு கட்ட முன் விடுவார்கள்
சோலாரில் அமைய உள்ள புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் மாநகர பேருந்துகள் ஈரோடு நகரத்திற்குள் வராமல் இருந்தாலே ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்
கனி ராவுத்தர் குளத்தில் அமைய உள்ள பேருந்து நிலைய பணிகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளது இந்த பணியினை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.