வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
வேலூர்_20
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் வளாக காயிதே மில்லத் அரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மாற்றுத் திறனாளிகளிடம் கனிவுடன் உரையாடி அவர்களின் குரலை கேட்டு அறிந்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.