ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், நவ.9-
எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுபான்மை பஸ் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரம் அண்ணா சாலை அருகில் உள்ள ஜெகன் திரையரங்கம் முற்றுகை செய்ய முயன்ற 53 பெண்கள் உட்பட 108 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். மேலும் முற்றுகை இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், மாவட்ட செயலாளர்கள் நஜ்முதீன், ஆசாத் இராமநாதபுரம் நகரத் தலைவர் ஹக்கீம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொகுதி நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தடையை மீறி அமரன் திரைப்படம் நடைபெறும் திரையரங்கை நோக்கி சென்று முற்றுகை இட முயன்றனர். இராமநாதபுரம் போலீசார் முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 53 பெண்கள் உட்பட 108 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள தனியார் மகாலில் வைத்து விட்டு பின்னர் விடுவித்தனர்.