சிவகங்கை:பிப்:28
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் வசித்து வருபவர் முருகன் மகன் தென்னரசு . இவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் . அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது : எங்கள் வாரிசுகளுக்கு சொந்தமான காஞ்சிரங்கால் குரூப்பில் உள்ள இடத்தை பிரித்துத் தரக்கோரி வழக்கு நடைபெற்று அவை நிலுவையில் இருக்கிறது . இந்நிலையில் ராசுவின் வாரிசுகளாக சாந்தி , உமாராணி (லேட் ) ரமேஷ் , மாரிமுத்து ஆகியோர் இருக்கும்போது முறைகேடாக ரமேஷ் என்பவர் ராசுவின் வாரிசுகளில் உள்ள உமாராணி என்பவர் திருமணம் ஆகாமலே இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார் . ஆனால் உண்மையில் உமாராணி திருமணம் ஆகி அவருக்கு செல்வம் என்ற கணவரும் செந்தில்குமார் , விக்னேஷ் ஆகிய மகன்களும் உயிரோடு உள்ளனர் .
எனவே உமாராணியின் வாரிசுகளை மறைத்து போலிச் சான்றிதழ் தயார் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார் . எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருணை கூர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . என அவர் மனைவி கூறியுள்ளார் . மேலும் இந்த மனுவின் நகலை சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை இயக்குனர் அவர்களுக்கும் , ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனருக்கும் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் போலியாக பத்திர பதிவு செய்ததை ரத்து செய்து போலியாக பத்திரப்பதிவு செய்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.