பரமக்குடியில் இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி.
பரமக்குடி,டிச. 4 : பரமக்குடியில் உடல் நலக்குறைவால் இறந்த வழக்கறிஞருக்கு தமிழ்நாடு பார்க் கவுன்சில் சார்பாக வழங்கப்படும் சேமநலநிதியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கிய பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கம்.
பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ் குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் மூலமாக வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சம் தமிழ்நாடு பார் கவுன்சில் மூலமாக பெறப்பட்டது. இதற்கான காசோலையை பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பூமிநாதன் தலைமையில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் இறந்த வழக்கறிஞர் ரமேஷ்குமாரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க செயலாளர் யுவராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம். பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இறந்த வழக்கறிஞர் ரமேஷ் குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் சேமநலநிதி காசோலையை வழங்கினார்கள்.