வேலூர்-07
கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல் மற்றும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை இழிவாக பேசிய வன் முறை தூண்டும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தலைவர் பி.கே.வெங்கடேசன் தலைமையில் ஊர்வலமாக வந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் ஜெகன் ,மாநில துணை தலைவர்கள் என்.டி.சண்முகம்.இளவழகன்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஜாதி வெறியர்கள் சிலர் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரை இழிவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர் இவ்வாறு செயல்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவானணிடம் மனுவினை அளித்தனர் அதில் வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்க கோரிகையும் வைத்தனர்.