ஈரோடு டிச 15
முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் எம்எல்ஏ கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல்இன்று காலை அவர் காலமானார்.
கடந்த பொது தேர்தலில் இவரது மகன் இ வி கே திருமகன் ஈவெரா போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஈரோட்டில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் ஈ.வி கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
இவரது வீடு ஈரோடு ஈவெரா திருமகன் ரோட்டில் உள்ளது. வீட்டில் இளங்கோவன் படம் வைக்கப்பட்டு மாலை அனுமதிக்கப்பட்டது இந்த படத்துக்கு காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.