திண்டுக்கல் ஏகத்துவ மெய்யான சபை தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் எஸ்பிடி மஹாலில் நடைபெற்றது. ஆலிம் புலவர் எஸ்.
ஹீஸைன்
முஹம்மது விழா முன்னுரையும் பாத்திமா ரலி அவர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கமும் கூறினார். ஹாஜா ஷரிப் யாஸீனி கிராஅத் ஓதினார். அப்துல் மஜீத் யாஸீனி ஏகத்துவ மெய்யான ஸ்தாபகர் ஆத்ம ஞான மகான் ஜமாலிய்யா அஸ்ஸைய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹாஷிமி நாயகம் எழுதிய பத்ரு சஹாபாக்களின் தமிழ் புகழ் மாலை பாடி விழா துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறிஞர்கள் வாழ்த்துரைக்குப்
பின்பு பரிசுகளின் தொகுப்பினை எஸ். காஜா நஜ்முதீன் வாசிக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை வென்ற
திண்டுக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவி எஸ். அப்ராக்கு முதல் பரிசு ரூபாய் 1500 ,விருது மற்றும் கிப்ட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது. அவருக்கு பயிற்சி அளித்த பள்ளி ஆசிரியை ஹீமைரா விருது கிப்ட் பாக்ஸ் மற்ற இரண்டு அரபி ஆசிரியர்களுக்கு ஆறுதல் பரிசாக எவர்சில்வர் பாக்ஸ், ஷால் வழங்கப்பட்டது. பாத்திமா முனாஜாத் மாலை பாடிய மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக நான்கு நபர்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது மூன்றாம் பரிசாக 3 நபர்களுக்கு தலா 300 வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மற்ற பெண்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக எவர்சில்வர் பாக்ஸ் மற்றும் ஷால் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை கௌரவத் தலைவர் எஸ்.கே.சி. குப்புசாமி, மா.மூ.ஹாஜி. கே.எம். ஏ. முஹம்மது அலி, ஹிதாயத்துன்னிசாஅரபி மதரஸா நிறுவனர் ஹாஜி எஸ்.எம்.எஸ். சேட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்யாண சுந்தரம், ஸ்ரீராமபுரம் ஹாஜி. முஸ்தபா பள்ளி தாளாளர் சார்பாக அரபி ஆசிரியர்கள், திண்டுக்கல் யாசின் மௌலானா பேக்டரி உரிமையாளர் ஷேக் ஜாபர்அலி, பொறியாளர் சேக் தாவூது, முதுகுளத்தூர் பக்ருதீன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ மெய்யான சபையினரின் குடும்பத்தார்களும் கலந்து கொண்டார்கள் அவர்களின் மூன்று பரிசுகளுக்கும் தகுதியான அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்கள் பெருந்தன்மையுடன் அவர்களுக்கு கிடைக்க இருந்த பரிசுகளை பெறாமல் மற்ற போட்டியாளர்களின் மாணவிகளுக்கும், பொதுமக்கள், பெண்களுக்கும் விட்டுக் கொடுத்தது போற்றத் தகுந்தது. நிகழ்ச்சியின் போது எஸ்.பி.டி திருமண மண்டப உரிமையாளர் மணி நன்றி கூறப்பட்டது.
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics