சுசீந்திரம்.டிச.5
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு உட்பட்ட கொட்டாரம் அகஸ்தீஸ்வரம் ஒற்றையால் விளை உபட்ட அரசு பள்ளிகளுக்கு சென்று அங்கு மாணவ மாணவர்கள் ஏதாவது போதைப் பொருட்கள் உபயோகிக்கிறார்களா என்பதை நேரில் மாணவர்களிடம் கேட்டு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும் விளக்கி கூறினார். பின்பு தலைமை ஆசிரியரிடம் சென்று ஏதாவது மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் பள்ளியை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும்படி கூறினார். பின்பு பள்ளி அருகே உள்ள கடைகளுக்கு சென்று ஏதாவது போதைப்பொருட்கள் விற்கிறார்களா என்பதை ஆராய்ந்தார் பின்பு கடை உரிமையாளர்களிடம் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிந்தால் உடனடியாக குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்தார். பின்பு அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும் ஏதாவது பள்ளியை சுற்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிந்தால் உடனடியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.