பனைக்குளத்தில் தமுமுக 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
200 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்
ராமநாதபுரம், செப் 16-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு துவக்க ஆண்டை முன்னிட்டு பனைக்குளம் தமுமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் பனைக்குளம் நத்தர் வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் நடத்தப்பட்டது.
முகாம் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அஹமது ஹசன் தலைமையில், தமுமுக பனைக்குளம் தலைவர் அஸ்ரார் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமினை பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஹாஜி ஜனாப் வஹாப், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஜனாப் ஹம்ஸாத் அலி, ஐக்கிய முஸ்லிம் சங்க செயலாளர் ஜனாப் ஆசிக் கனி ஆகியோர் துவக்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இம்முகாமில் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். முகாமில் இலவசமாக ரத்தப் பரிசோதனையும் மாத்திரை மருந்துகளும் வழங்கப்பட்டது. கண் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் இலவசமாக பார்க்கப்பட்டது 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இம் முகாமிற்கு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மமக மாவட்ட செயலாளர் ஜிஃப்ரி, தமுமுக மாவட்ட செயலாளர் ஜாவித், எஸ்எம்ஐ மாவட்ட செயலாளர் பஹாத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் யாசிர் , மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் பஹ்ருல் ஹஸன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் கிளை நிர்வாகிகள் பாசித், ஆசிக், முகவை கமால், சுகைல், மகாதீர், நுத்புல்லா, ஹபீப், சுஹைல், அமீர் சாலிஹ், நஸிம், ஹம்தான், சஹாதத்துல்லா, நஸ்ரான், அணீஸ், அப்ஃஸான், அப்துல்லாஹ் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.