திருப்பத்தூர், செப்.3-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் திருப்பத்தூர் நகர் தமுமுக செயலாளர் அசாருதீன் தலைமை வகித்தார். நகர் மருத்துவ அணி செயலாளர் ராஜா முகமது வரவேற்புரையாற்றினார். நகர் அலுவலகத்தை தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில தொண்டரணி செயலாளர் பர்கி, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இம்ரான் கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நகர் பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் துணை செயலாளர் சையது, தமுமுக நகர துணை செயலாளர் முகமது எகியா, ஊடகப்பிரிவு நகர செயலாளர் ஹமீது, மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பணி செயலாளர் ஷபியுல்லா, எம்டிஎஸ் மாவட்ட செயலாளர் வருசை முகமது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் கான் மற்றும் நகர் கிளை நிர்வாகிகள் சிங்கம்புணரி தேவகோட்டை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.