பூதப்பாண்டி – டிசம்பர்-14-
பூதப்பாண்டியை அடுத்துள்ள துவரங்காடு பத்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜோஷ்வா இவர் கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பூதப்பாண்டி வழியாக செல்லும் அரசியர் கால்வாய் அருகே தொந்திக்கரை சாலையோரமாக பனை மரத்தை வளர்ப்போம் இயற்க்கையை பாதுகாப்போம் என தனது சொந்த செலவில் 200 பனை விதைகளை நட்டு தினமும் அதற்க்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார்.
அவருடைய விடாமுயற்ச்சியில் பனை மரங்கள் முளைத்து நல்ல செழிப்பாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று சில அடையாளர் தெரியாத மூன்று நபர்கள் அங்கு வந்து அதில் இருபது இளம்பனை மரங்களினுடைய ஓலைகளை வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பனை மரங்கள் வெட்டப்பட்ட இடத்திற்க்கு சென்று பார்வையிட்டு அதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.