சுசீந்திரம் அக் 28
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 46- வது வார்டுக்கு உட்பட்ட என். ஜி. ஓ காலணியில் அம்மா கிளினிக் அருகில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பெரிய தேக்கு மரம் ஒன்று, வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி 46 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் த.வீரசூரபெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வீரசூரபெருமாள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்களையும், நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்களையும், மின்வாரிய ஊழியர்களையும் வரவழைத்து மரம் மற்றும் மின் கம்பிகளையும் சரி செய்தார். கவுன்சிலரின் துரித நடவடிக்கையால் சில மணி நேரத்தில் மரம் மற்றும் மின்கம்பிகள் சரி செய்து அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. கவுன்சிலர் வீரசூரபெருமாள் ஊழியர்களுடன் இணைந்து மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.